மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
Spread the love

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

இந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும்இந்த வாக்குகள் இல்லாமல் எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி


ஆகவோ முடியாது என்றும் தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல்சுரேஷ் இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்யும் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு

இழைத்து வரும் பல்வேறு அநீதிகளுக்கு தீர்வு காணும் வகையில் நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் திங்கட்கிழமை (19) காலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

இதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று இந்த நாட்டில் வாழும் எமது ஒட்டு மொத்த மலையக மக்கள் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள அதேநேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்தித்து செயலாற்றக்கூடிய சக்தியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த காலங்களைப் போல எமது மலையக மக்களின் வாக்குகளை யாரும் விலை பேசிட முடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளை விலை பேசிட இடம் கொடுக்க மாட்டேன்.

ஆகவே மலையக மக்களுடைய இந்த 17 இலட்சம் வாக்குகள் இல்லாமல் யாரும் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என்று நாம் ஒரு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்போம்.

அதேநேரத்தில் எம்மிடத்திலும் சில குறை நிறைகள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எமது பிரதநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் எமது மலையக மக்களுக்கும், மலையகம் சார்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதாரம் உட்பட பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ள இந்த நிலையில் தேர்தல் ஒன்று பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

அதேநேரத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் மலையகத்தை சார்ந்த ஏனைய மக்களுக்கும் சமுர்த்தி உதவிகள், உலக வங்கியால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள், வருமானம் குறைந்தவர்களாக வழங்கப்படும் சலுகைகள் எமது மக்களுக்கு வழங்குவது அரிதாக உள்ளது.

ஆகவே மலையக மக்கள் யாவரும் வறுமை காட்டுக்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுவதால் நாட்டில் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் உதவு பட்டியலில் இவர்களும் உள்ளாக்கப்பட்ட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளேன்.

அதேநேரம் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளை நியமித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் மலையகத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு நியமிக்கப்படுவோர் தமது பொறுப்புகளை மீறும் பட்சத்தில் அது ஒரு பாரிய பாதிப்பை இந்த நாட்டில் ஏற்படுத்தும். அது தேர்தலிலும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் விடயங்களில் இருக்கலாம்.

எனவே எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினை பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரச்சின்களுக்கு சிறந்த தீர்வு காணப்படாமல் தேர்தல் ஒன்றுக்கு சிந்திக்க முடியாது” என்றார்

No posts found.