மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

Spread the love

மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

எமாற்ற நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்…..

ஊடகவியலாளர் என்ற வகையில் மலையக அரசியல் தொடர்பில் சில கருத்துகளை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன் (பா.திருஞானம் – 0777375053)

தற்போது மலையகத்திற்கு தேவை பழிவாங்கும் அரசியல் அல்ல. நான் பெரிதா நீ பெரிதா என்று போட்டி போடும் அரசியலும் அல்ல

இவ்வாறான அரசியல் காரணமாக பாதிக்கபட்டது மலையக பெருந்தோட்ட மக்களே இதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன்.

தற்போது மலையகத்தில் அரசியலில் இடைவெளி ஒன்று உருவாகி உள்ளது. மக்களின் நாடி துடிப்பில் சில சலசலப்பு காணப்படுகின்றது.

இந்த நாடியை சரியாக பிடித்து அரசியல் செய்பவர்களே பொருத்தமாணவர்களாவர். நான் சொல்லுவது தான் சரி நான்

சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும் நானே தலைவன் நான் பெற்றி பெற்றுவிட்டேன் என்று என்ணினால் அது பகல் கனவாகவே இருக்கும்.

தற்போது மலையகத்தில் படித்தவர்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஏமாற்ற முடியாது. தொழிலாளர்கள் கூட எல்லா

விடயங்களும் தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இதை எல்லாம் விட இளைஞர்கள் துடிப்பாகவும் விபரமாகவும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியவர்களாகவும் பொய் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

தற்போது மக்கள் இதற்கு பதில் கொடுக்கும் அளவிற்கும்.முன்னேறி உள்ளனர். ஊடகங்களில் அறிக்கை கொடுத்து விட்டால் தான் சரி என்று சொல்பவர்களும் முகபுத்தக அரசியல் செய்பவர்களே

அதிகமாக இருக்கின்றனர். வாக்காளர்கள் எல்லாவற்றையும் கவனமாக பார்த்து வருகின்றனர் சில முடிவுகளையும் முன் கூட்டியே எடுத்தும் விட்டனர்.

அதேபோல் மலையகத்தில் ஊடகத்துறையும் திறமாக செயற்பட்டு வருகின்றது. இந் நிலையில் சிந்தித்து செயற்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும்.

      Leave a Reply