மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

Spread the love

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஞாயிற்றக்கிழமை (7)

மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த பஸ் நிலையம் இன்று

ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம்

அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள்

இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உப தலைவர்,

உறுப்பினர்கள், அரச, தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் கொரோனா வைரஸ் #

பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார முறைப்படி அரசின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது#

      Leave a Reply