மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Spread the love

மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கலவான,

எஹலியகொட,குருவிட்ட, பலாங்கொடை,கிரியெல்ல, எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவிற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல,

யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது