போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ

Spread the love

போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ

அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால சட்டம், அரசாங்கத்தின் தவறு மற்றும் இயலாமையை மூடி

மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,


2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் சட்டத்தின் ஊடாக பல செயற்பாடுகளை செய்ய
முடியும் என்றாலும் அவசர அவசரமாக அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு வருவதன்

மூலம், இன்னும் ஆபத்தான செயற்பாடு ஒன்றுக்கு அரசாங்கம் இழுத்துச் செல்வதாகவே அமைகிறது என்றார்.

நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றி, மனித உரிமைகளுக்கு கூட சவால் விடுவதே இதன்மூலம் அரசாங்கத்தின் நோக்கமாக அமைகிறது என்றார். அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு

வந்த உடனேயே, இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என தெரிவித்த அவர், கொரோனா ஒழிப்புக்காக அவசரகால சட்டத்தின் உதவியும் கிடைக்காது என்றார்.

நாட்டின் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிநாட்டு இருப்பை போதியளவு வைத்திருக்கவோ முடியாத நிலையில், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்கே அவசரகாலச் சட்டம் அரசாங்கத்தால் தேவைப்படுகின்றது என்றார்.

ஜனநாயகத்தை தலைகீழாகப் புரட்டி, சர்வாதிகாரத்துக்கு வித்திடும் இந்த அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானியை உடனடியாக மீளப் பெறவேண்டுமென, ஜனாதிபதியிடம்

கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த அவர், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நுகர்வோர் சட்டத்தை செயற்படுத்தவேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவர்களுக்கு எதிராக அதனூடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்

Leave a Reply