பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம் photo

Spread the love

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் (ஆயளம) வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்

உலகத்தையே குளுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இலங்கையில் இன்றுடன் சதம் அடித்து 106 யை தாண்டியுள்ளது.

இந் நிலையில் மலையகத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க பல சுகாதார

விழிப்பணர்வுகளும் அதற்கான பொருட்கள் வினியோகமும் அரசாங்கத்தின் நிவாரண பணிகளும் தோட்டங்களுக்கு

முன்னெடுத்து செல்லப்படுகின்றது என்ற பல அறிக்கைகளை நாளாந்தம் நாம் கேட்டு வருகின்றோம். ஆனால் இவை முறையாக

செயற்பட்டு வருகின்றதா அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கின்றதா என்று நோக்கும் போது அவை கேள்விகுறியாகவே இருக்கின்றது.


தோட்டங்கள் என்றதும் குறிபிட்ட மாவட்டத்தை மாத்திரமாக கொண்டதாக இல்லை. மத்திய ஊவா சப்ரகமுவ மகாணங்களையும் மற்றும் குருநாகலையும் கொண்டே பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து

வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் முறையான நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது தொழிலாளர்கள் குறித்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

முககவசம் அணிய வேண்டும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள்

கூறப்பட்டாலும் நடைமுறையில் பல இடங்களில் காணக் கூடியதாக இல்லை.

முககவசங்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டது. அவை ஒருமுறை பாவித்துவிட்டு மீண்டும் கழுவி பாவிக்க முயற்சிக்கும் போது பிஞ்சி

கிளிந்து விட்டது. மீண்டும் முககவசங்கள் வழங்கப்படவில்லை. சில தோட்டங்களில் முககவசங்களே வழங்கப்படவில்லை. இந்

நிலையில் தொடர்ந்து இவர்கள் பாவிக்க கூடிய முககவசங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முககவசம் பாவிக்க

கூடிய வசதியே முக கவசங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோ தோட்ட தொழிலாளர்களுக்கு இல்லை. சந்தையில்

முறையான முககவசமும் இல்லை.
தற்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கூட்டமாக ஒரு இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமலே தொழில்

செய்து வருகின்றனர். இவர்களுடன் தோட்ட உத்தியோகஸ்தர்களும் சேவை செய்து வருகின்றமையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

சில இடங்களில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் முககவசம் போட்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் என்பது யாருக்கும் எந்நேரத்திலும் தொற்றலாம் வந்தால் யாரையும் விட்டு வைக்காது. இதை உணர்ந்து

அனைவரும் மனிதர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவது கட்டாயமானதாகும்.

இந்நிலையில் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க

சம்பந்தபட்டவர்கள் முன் வரவேண்டும். இவர்களுக்கு விழிப்புணர்வுகள் மாத்திரம் அல்லாது தேவையானதை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு

Leave a Reply