புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம்

Spread the love

புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம் –

இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது.

குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனித உரிமைகள்

பாதுகாக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர்களுக்கு, அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய நிகழ்வுகள், 2009 முள்ளிவாய்க்கால்

இனப்படுகொலை முடிவாக நிரூபித்திருந்ததோடு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் தமது புவிசார் அரசியல் காரணிகளை

கருத்தில்கொண்டு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த விடயத்தினை வெளிக்காட்டிய 2012 வெளிவந்த ஐ.நா. உள்ளக

மறுஆய்வு அறிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று, சிறிலங்கா தொடர்பாக முகன்மை குழு ஐ.நாவில் சமர்ப்பித்த ஆரம்ப (ணநசழ னசயகவ) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய (ணநசழ ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு,

நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைத்துள்ளது.

2009ம் ஆண்டு பெரும் இனப்படுகொலையொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான

அரசியல்வெளி என்ற நிலையில், தமிழர்கள் மீண்டும் சர்வதேச நிறுவனங்களை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையை , நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக திரும்பவும் நாடினார்கள் என்பதனை

சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான

இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை; எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தனதறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அசராங்கம்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பரிந்துரைப்பதன் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஐ.நா உயர்

ஆணையாளர் பேரவைக்கு அனுப்பிய தனது அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளை

வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர்கள், முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும்

சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்களின் நிபுணர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர். இந்த கோரிக்கை சமீபத்திய பி 2

பி பேரணியில் (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பல்லாயிரக்கணக்கான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 2011ம்

முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கோரிக்கையினை ஐ.நாவுக்கான மனுவில் தெரிவித்திருந்ததோடு,ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று வலியுறுத்தி 2015ம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தது.

சிறிலங்கா தொடர்பான முகன்மை குழு சமர்ப்பித்த ஆரம்ப (Zero Draft Resolution) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள்

புரிந்தவைர்களை பொறப்புக்கூற வைப்பதில் தோல்வியடைகிறது. நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சிய ( Zero )

வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது. இதனால் நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.

பேரவையின் கடமைகளையும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான உலகளாவிய அறைகூவலை பூர்த்தி செய்யவும் ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த அமர்வு ‘மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மிக உயர்ந்த நியமங்களை நிலைநிறுத்துவது’, ‘மனிதனின்

முழுமையான செயல்பாட்டை ஊக்குவித்தல்’ உள்ளிட்ட நோக்கத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதோடு மேம்படுத்துதல், ‘நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித

உரிமைகளை காக்கும் கடமைகள்’,’ மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பங்களிப்பு செய்தல் ‘ ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும். என குறித்துரைத்துள்ளதோடு,

உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஆளானவர்கள்

நீதிக்காக மனித உரிமைகள் பேரவையையே நாடுகின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது

Leave a Reply