பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Spread the love

பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.

Leave a Reply