பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
Spread the love

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .

காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .

இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .

195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .

அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .

பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .

  • வன்னி மைந்தன் –