பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே

Spread the love

பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே

பொதுவாக பாலங்கள் அமைப்பது நீர் உள்ள இடங்களில்; நீர் ஆற்றின்

கீழே செல்ல  வாகனங்கள் மேலே செல்வதற்கே. இதற்கு மாறாக நீர் பாலத்தின் மேலே செல்வதற்கு பாலம் ஒன்று கண்டி

மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட இரட்டைப்பாதை தொரகல நீவ்பீககொக் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.


“சங்கிலி” பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம்

ஆயிரகணக்கான பொது மக்கள் பயணித்து வருகின்றன. தொhரகல கிராமத்திற்கும் நயாபான

தோட்டத்திற்குமாக இரண்டு அரச போக்குவரத்து சேவைகளும் தனியார்

பஸ்களும் முச்சக்கர வண்டிகளும் தொரகல பிரதேசத்தில் 15.000 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் நீவ்பீகொக்

தோட்டம் ஓல்ட்பீகொக் தோட்டம் நயாப்பன தோட்டம் தொரகல கிராமத்தை சேர்ந்ந மக்களும்; நாளாந்தம் இந்த பாihயை பாவித்து  வருகின்றனர். 


இவ்வாறான நிலையில்  அன்மை காலங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் நிர்மாண பனிகள் சீர் இன்மை

காரணமாக பாலம் பழுதடைந்து குற்றும் குழியுமாக நீர் தேங்கி போக்குவரத்திற்கு பொருத்தமற்று காணப்படுகின்றது.

இதனால் பயணிகளும் பயணிக்கும் வாகனங்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந் நிலையில் இந்த பாலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தில் வெள்ளம்
பாலத்தில் வெள்ளம்

Leave a Reply