பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Spread the love

பாரிய புயல் – கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை நாட்டை சுற்றியுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்

நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது கடற் பிரதேசத்தில் இருப்போர் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.

அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி

திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக்

கொள்ளப்படுகிறீர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான

கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.


காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும்

ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது

மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை

ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன்

அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Leave a Reply