பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி

Spread the love

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது . இவ்வேளை பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் ,தாய் நாடான பாகிஸ்தானுக்கு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றனர் .

பிரிட்டனில் வசிக்கும் பல லட்சம் பாகிஸ்தான் மக்கள் இணைந்து ,தமது தாய்நாடான பாகிஸ்தானில் ,வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தான் மக்களுக்கு ,உடனடி நிவாரணம் .மற்றும் நீண்டகால உதவி திட்டங்களை வழங்கிட முன் வந்து செயல்படுகின்றனர் .

இதில் இளம் வாலிபர்கள் தலைமையில் உருவாக்க பட்டுள்ள ,உதவி குழு ,பிரிட்டனில் இருந்து மருந்து மற்றும் உணவு பொருட்கள், அடங்கியவற்றை பாகிஸ்தானுக்கு விமானம் ,மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பிய வண்ணம் உள்ளனர் .

மேலும் வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, வாழ்வாதார உதவிகளை வழங்கும் முகமாக ,பிரிட்டன் பாகிஸ்தான் மக்கள் ,நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு – பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்கள் உதவி


பிரிட்டன் வாழ் பாகிஸ்தான் மக்களும் ,முன்வந்து இந்த உதவிகளை வழங்கிட ஆர்வம் காட்டிய வண்ணம் உள்ளனர் .

இதுவரை வெள்ளத்தில் சிக்கிய பாகிஸ்தானில், சுமார் 1.367 பேர் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .அத்துடன் பல நூறு கால் நடைகளும் பலியாகியுள்ள சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது .

வெள்ளத்தில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மக்களை மீட்கும் ,நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன .

அணுகுண்டின் வல்லரசாக விளங்கி வரும் ,பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க முடியாது ,திணறிய வண்ணம் உள்ளது .

இலங்கையை போல பாகிஸ்தானும் ,சீனாவினால் இரையாக்க பட்ட நிலையில் ,பாகிஸ்தான் பெரும் ,பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .

இவ்வாறன நிலையில் தற்போது, பாகிஸ்தான் பிரிட்டன் வாழ் மக்கள் ,
உதவிகளை வழங்க முன் வந்துள்ளது பாராட்ட பெறுகிறது .

இந்த பாகிஸ்தான் மக்களை போன்று ,இலங்கை வாழ் தமிழர்களும் இருக்கின்றனரா என்பதை ,சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் .

இந்த ஒற்றுமையுடன் இலங்கை வாழ் தமிழர்களும் நடக்க வேண்டியது ,மேற்படி விடயங்கள் உதாரணமாக உள்ளன .

நாடு கடந்தாலும் ,தாய் நாட்டை மறக்காத இந்த மக்கள் சேவை ,வாழ்த்துக்களை பெறுகிறது .

    Leave a Reply