பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்

Spread the love

பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்

பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக அழிக்கப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணிபகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதாரதொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை,

விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில்கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இன்று(27) குறித்த பகுதிக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் கன்றுகளை பார்வையிட்டும் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.

தொடரச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்க தாம் உயர் மட்டம் வரை சென்று இதற்கான தீர்வை பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்.

மிளகாய் கன்று
மிளகாய் கன்று

    Leave a Reply