பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு வரலாம்- ஐக்கிய தேசிய கட்சி

Spread the love

பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு வரலாம்- ஐக்கிய தேசிய கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவுக்கு சத்தியபிரமாணம் செய்ய

இடமளித்தமை பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் செயலென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில், மரண தண்டைக்குள்ளானக் கைதியொருவர் நாடாளுமன்ற

ஆசனத்தில் அமர்வதற்கான எந்தவொரு முன்மாதிரியான நிகழ்வும் இலங்கை வரலாற்றில் இடம்பெற்றதில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேற்படி விடயத்தை தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கே உள்ளதென நீதிமன்ற தீர்ப்பிலும்

குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மரணதண்டனைக்குள்ளான கைதியான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்தில் அமர்த்த முடியுமென வழக்ககுத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

மேலும், அரசமைப்பின் 89ஆவது உறுப்புரையின் பிரகாரம், மரணதண்டனைக்குள்ளான கைதியொருவர், நாடாளுமன்றத்தில்

நடைபெறும் வாக்கெடுப்பகளில் கலந்துக்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் அக்கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பிரேமலால் ஜயசேகர தொடர்பாக சபாநாயகர் எடுத்த தீர்மானத்தைப் மறுபரிசீலனை செய்ய வேண்டியது

அவசியமெனவும், நாடாளுமன்ற ஒழுங்குகளை புறக்கணித்துச் செயற்படுவதால் பயங்கரவாதிகளும் நாடாளுமன்றத்துக்கு

தெரிவாகக்ககூடிய நிலைமை உருவாகும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அறிவுருத்தியுள்ளது.

Leave a Reply