நுவரெலியாவில் உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி

Spread the love

நுவரெலியாவில் உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

நுவரெலியாவில்; உரம் தட்டுபாடு காரணமாக மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது கடைகளில் போதிய அளவு தேவையான உரம் இல்லை இதனால் நுவரெலியா

விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலை தொடருமானால் மரக்கரியின் விலை மேலும் அதிகரிக்கும். அரசாங்கம் தனது தேர்தல் காலத்தில் உரத்தை

மானியமாகவும் இலவசமாகவும் வழங்குவதாக வாக்குருதி வழங்கியது இருந்தும் காசு கொடுத்து கூட வாங்குவதற்கு இன்று உரம் தட்டுப்பாடாக காணப்படுகின்றது. தேர்தல்

காலத்தில் இலவசமாக உரத்தை வழங்குவதாக கூரிய அரசாங்கம் காசு கொடுத்தாவது உரத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி

வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
நுவரெலியா மாவட்டம் ஐபோரஸ்ட் தோட்டம் மூன்றாம் பிரிவு ஸ்ரீ விஷ்னு ஆலயத்தின் பரிபாலன சபையின்

வேண்டுக்கோலுக்கு அமைய சமையல் பாத்திரங்கள் ஆலய நிர்வாக சபையிடம் வழங்கும் நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. (03.02.2020) இதன் போது கருத்து

தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

அன்மையில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தினால் மரக்கரிகள் பாதிப்பிற்கு உள்ளானது. மரக்கரி தோட்ட தொழிலாளர்களுக்கும்

தோட்டங்களில் தொழில் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய மண் கழிதன்மை அடைந்தமையினால் மரக்கரிகளின் வளர்;ச்சி விகிதம்

குறைவடைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு போடப்பட்ட சேதன மற்றும் அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்து

செல்லபட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சில மரக்கிகள் மழை கராணமாக அழுகியுள்ளன. தற்போது தொடர் வரட்சி நிகழ்கின்றது.

இந் நிலையில் மரக்கரி உற்பத்தியில் ஈடுப்பட்டோரும் விற்பனைகளில் ஈடுப்பட்டோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நுவரெலியா விஷேட பொருளாதார

மத்திய நிலையத்திற்கும் போதுமான அளவில் மரக்கரிகள் வராததினால் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாமலும் இருக்கின்றது. தற்போது இந்த காலநிலை

மாற்றதினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு என்ன தான் தீர்வு. இவர்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்குமா

அல்லது மானியங்கள் கிடைக்குமா என்று விவசாயிகள் அங்களாகின்றனர்.

இவ்வாறான நிலையில் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும்

உரத்தை இலவசமாக வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் காசு கொடுத்தாவது பெற்றுக் கொள்ள

நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உர கடைகளில் ஒரு கிலோ உரத்தை கூட வாங்க முடியாத நிலையில்

மரக்கரி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்று மேலும் கருத்து தெரிவித்தார்

நுவரெலியாவில் உரம் தட்டுபாடு
நுவரெலியாவில் உரம் தட்டுபாடு

Leave a Reply