நில ஆக்கிரமிப்பில் இலங்கை

நில ஆக்கிரமிப்பில் இலங்கை
Spread the love

நில ஆக்கிரமிப்பில் இலங்கை

நில ஆக்கிரமிப்பில் இலங்கை ,மகாவலி அபிவிருத்தியின் பெயரில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தக் கோரி போராட்டம்.


மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய் கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 நில ஆக்கிரமிப்பில் இலங்கை


போராட்டமானது இன்று( வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மகஜர் கையளிப்பு


போராட்டத்தில் ‘தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே’, ‘மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து’, ‘எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே’,

‘மகாவலி அபிவிருத்தி முல்லைத்தீவில் பௌத்த மயமாக்கலுக்கா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இலங்கை ஆளும் ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியில் கொண்டிருக்கும் ,தமிழர்களின் பூர்விக குடிகள் வசிக்கும் நில அபகரிப்புக்கு எதிராக மக்கள் நடத்துகின்ற்னர் .

வனஜீவராசிகளை ஏவி காணிகளை அபகரிப்பது , தமிழர்களை அச்சுறுத்தி பூர்விக மக்கள் வாழ்விடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவது என்கின்ற நடவடிக்கையில் சிங்களம் ஈடுபட்டுள்ளதை இவை காண்பிக்கின்றன என ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .