நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு

Spread the love

நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அத தெரண செய்திச் சேவைக்கு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

2022 வரவு செலவு திட்ட யோசனையை சமர்ப்பித்து என்னால் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு திட்ட உரையின் 68 ஆவது பக்க 7.9 இல் ஒரு முறை மாத்திரம் அறவிடப்படும் வரி யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில் 2000 மில்லியனை விட அதிக வரி

வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் மீது சுமத்தப்படும் 25 சதவீத மிகை வரி குறித்து தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி ஊடாக சுமார் 100 பில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வாறுதான் 68

ஆம் பக்கத்தில் உள்ளது. அதன்படி, 69 பேரை இனங்கண்டிருந்தோம். இவர்களிடம் இருந்து 105 பில்லியன் வரி வருமானம் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களை இதில் உள்ளடக்க நாம்

எப்போதும் எதிர்ப்பார்க்கவில்லை. அதை நாங்கள் திட்டமிடவே இல்லை. எனினும் கடந்த அரசாங்கத்தின் 2017 இலக்கம் 24 உள்நாட்டு வருமான சட்டத்தில் இந்த 11

நிதியங்களும் வரி அறிவிட வேண்டிய நிறுவனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மிகை வரிக்கு குறித்த நிதியங்களும் உள்ளடங்கும் என பொது மக்கள்

மத்தியில் கருத்து பரவியுள்ளது. இதனை நாம் அமைச்சரவையில் விளக்கப்படுத்தி குறித்த 11 நிதியங்களையும் இந்த வரியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    Leave a Reply