நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

Spread the love

நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

தற்போதைய Covid 19 தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில்

ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா

நிலைமையினை கருத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட

அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக

நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர், பொலிசார்

மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார ஆலோசனைகளை பக்தர்களுக்கு தெரிவித்துவருகின்றனர்.

அதனடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்பட

வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தினை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

எனவே சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த தடவை நல்லூர் ஆலய தேர்

உற்சவத்திற்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது, சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய

பிரசன்னத்தை குறைத்து, ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது

ஒவ்வொருவருடையதும் கடமையாகும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன். மேலும் தெரிவித்துள்ளார்.

      Leave a Reply