ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்

Spread the love

ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்

ரூ.5 கோடி மோசடியில் தனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, சிங்காரவேலன் தன்னை பல வகையில் மிரட்டி வந்ததாக நடிகர் விமல் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்
நடிகர் விமல்

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா

தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இதற்கு பதிலடியாக நடிகர் விமல் கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மன்னர் வகையறா படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பூபதி பாண்டியன் என்பவரை அறிமுகம் செய்தார். சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை.

கோபி பணம் கேட்கும்போதெல்லாம், சிங்காரவேலன் என்னை கை காண்பித்து விடுவார். எனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னை பல வகையில்

சிங்காரவேலன் மிரட்டி வந்தார். நான் எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடும், என்று பயந்து சமாளித்து வந்தேன். எனது பயத்தை அவர் எனது பலவீனமாக எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி வந்தார்.

இதனால்தான் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் முன்ஜாமீன் பெற்று விட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட

தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்.

அதன் பிறகு துணிச்சலாக நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு ஓரளவு தொல்லை குறைந்தது. இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

என்மீது கொடுத்துள்ள புகார் பற்றி பத்திரிக்கைகளில் படித்துதான் நான் தெரிந்து கொண்டேன். என்மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது. எனக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு கேட்டும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு விமல் கூறினார்.

    Leave a Reply