தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

Spread the love

தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

கடந்த தினம் நையீரியா St Francis Catholic Church தேவாலயம் மீது மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐம்பதுஅப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

குறித்த நாளன்று வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த அப்பவி மக்கள் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

ஆயுத தாரிகள் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலில் இதுவரை,அங்கிருந்து வரும் தகவலின் அடைப் படையில் ஐம்பது பேர் பலியாகியும் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என நம்ப படுகிறது , எனினும் இந்த தாக்குதல் சேத விபாரங்கள் முழுமையாக வெளியாகவில்லை

தாக்குதல் நடந்துள்ளது எனவும் ஐம்பது அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளது
,நையீரியாவில் இது போன்ற தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் என்பன அதிகரிக்க பட்டுள்ளன

அமைதி வழியில் தமது தேவனை வழிபட சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடாத்தி நட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளனர் ,

பொக்கோ கராம் என்ற அமைப்பினர் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் ,மற்றும் மக்களை கடத்தி சென்றனர் ,அது தவிர கிராமங்களுக்குள் புகுந்து அந்த கிராம

மக்களையும் கொன்று குவித்ததுடன் அவர்கள் வீடுகளையும் எரித்து விட்டு தப்பி ஓடினர்

தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

நாள் தோறும் நையீரியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,
தாக்குதல் நடத்த பட்ட ஆலய பகுதி எங்கும் நையீரியா அரச இராணுவம் குவிக்க பட்டு எதிரிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

தேவாலயத்தில் நடத்த பட்ட இந்த தாக்குதலுக்கு வெளிநாடுகள் ,மற்றும் மத ஒருமைப் பாட்டு சம்மேளனங்கள் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன

நையீரியாவில் தொடரும் இவ்விதமான வன்முறை தாக்குதல்கள் உடன் தடுத்து நிறுத்த பட வேண்டும் ,அது தவறின் இது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாகும் பேரவலம் இடம்பெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

நையீரியாவில் பாய்ந்தோடும் இரத்த ஆறு என்று தடுக்க படும் ,அங்கு அமைதியான சூழல் என்று எப்போது உருவாகும் என்பதே உலக சமுதாயத்தின் கேள்வியாக உள்ளது

ஆளும் ஆட்சியாளர்கள் சம்பந்த பட்டவர்களுடன் பேசி புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,ஒன்றித்த தேசமாக வாழும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்றே இந்த துப்பாக்கி குண்டு சத்தங்கள் ஓய்ந்து சமாதானம் நிலவும் என்பது உலகில் நடந்த போர்கள் வரலாறாக கற்பித்துள்ளன .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply