தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

Spread the love

தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும்.

நேற்று (20) வாக்களிக்க தவறிய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இன்றைய தினம் வாக்களிக்க முடியும்.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை செலுத்த தவறியோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என சகல கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்மாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமய ஸ்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 4,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் 3,200 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் 852 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முகாமைத்துவ பிரிவுக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply