ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு
Spread the love

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் அனுகூலமான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

மீன்பிடித் தொழிலை மேம்படுத்த ஜப்பானிய தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்குமாறும், கிராமங்களில் உள்ள பிள்ளைகளின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உதவுமாறும், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டைக்

கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்குமாறும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்