சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

Spread the love

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply