சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

Spread the love

சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான

மேன்மை தங்கிய யங் ஜீச்சியின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் (அக்டோபர் 8 ஆந் திகதி) இன்று கொழும்பு வரவுள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சு நேற்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைவதனால், உலகளாவிய தொற்றுநோயை

எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும்

சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜயம் செய்யும் சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அக்டோபர் 9 ஆந் திகதி சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முக்கியமான விஜயத்தின் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட பிரயாண அமைப்பு கொழும்பிற்கான தூதுக்குழுவினரை கட்டுப்படுத்துவதோடு, சுகாதார அமைச்சினால்

பரிந்துரைக்கப்பட்ட கடுமையான சுகாதார நெறிமுறையின் கீழ், அரச தலைவர் மற்றும் பிரதமருடனான இரண்டு

சந்திப்புக்களுக்குமான அவர்களது ஈடுபாடுகளைக் கட்டுப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply