சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
Spread the love

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணமா

டெங்கு நோய் நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் சதேவ்மினியை காப்பாற்றியிருக்கலாம் என அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் உயிரிழந்த சிறுமியின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லம்பிட்டிய, வென்னவத்தை 102/19 என்ற முகவரியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.