சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

Spread the love

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

ராகலை சென்லெனாட்ஸ் தோட்டம் தோட்ட தொழிலாளர்களான திரு திருமதி மெய்யப்பன் ஆழகாய் ஆகியோரின் புதல்வனான சசிகுமார் தனது பாடசாலை

காலத்தில் ஆரம்பிக்கபட்ட தனது விளையாட்டுத்துறையில் தற்போது மரதன் ஒட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளை தனதாக்கி கொண்டு வருகின்றார். இவர்

2010 ஆம் ஆண்டு இந்தியா நேரு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி நெறியை கற்வர் (DIPLOMA COURSE FOR

COACHES)இவரை இவரது வீட்டில் இவரது ஊரான ராகலை சென்லெனாட்ஸ் தோட்;டத்தில் நேரில் சந்திக்கும் வாய்பு கிடைத்தது.

இதன் போது எம் சசிகுமாரிடம் இந்த சாதனைகள் குறித்து வினவிய போது

எம் சசிகுமார் ஆகிய நான் ராகலை சென்லெனாட்ஸ் பாடசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்து கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் வேலையில் 1990 பாடசாலை இல்ல

விளையாட்டு போட்டியில் நடந்த மரதன் ஓட்ட போட்டியிலும் மற்றும் அஞ்சல் ஓட்ட போட்டியிலும் கலந்து எனது விளையாட்டு துறையை ஆரம்பித்தேன்.

அதன் பின் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா/த) கல்வியை தொடர்ந்தேன். அவ் பாடசாலையில் பல போட்டிகளில் பங்கு பற்றிவெற்றி

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

பெற்றேன். 1997 ஆம் ஆண்டு பாடசாலை வலய மட்ட போட்டியில் 10000 M மற்றும் 1500 M ஓட்ட போட்டியில் கலந்து முதலிடம் பிடித்தேன். பின் 1998 ஆம் ஆண்டு கல்வி பொது

சாதாரணதர பரீட்சையில் 06 பாடங்கள் சித்தி அடைந்த நான் தொடர்ந்து கல்வியை தொடர முடியாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை இடை நிறுத்தினேன். பின்னர்

சுயதொழிலில் அதாவது ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டேன். தொடர்ந்து மரதன் 10.000 M ஓட்டம்¸ 1500 M ஓட்ட போட்டிகளில் எனது முயற்சியின் மூலம பயிற்சி பெற்று

நுவரெலியா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றேன். அதன் பின் எனது அண்ணன் உடன் பிறந்த சகோதரன் சர்வதேச

மரதன் ஓட்ட வீரர் ஆ.மனோகரன் மூலமாக பயிற்சியை துவங்கினேன்.

முறையாக பயிற்சி பெற மைதானம் இல்லை. பயிற்சிக்கான போசனையான உணவுகள் இல்லை. இருந்தும் எனது முயற்சியை கைவிடாமல் 1999 வலப்பனை பிரதேச

போட்டிகளில் கலந்து 4×100 அஞ்சல் ஓட்ட போட்டி 10000 ஆ ஓட்ட போட்டிகள் முதலிடம் பிடித்தேன். 2000 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட மட்ட போட்டிகளில் 1500 M ஓட்ட

போட்டி முதலாம் இடத்தையும் 800அ போட்டி முதலாம் இடத்தையும்¸ மரதன் ஓட்டப் போட்டியில் 4 இடத்தையும் பெற்றேன்.

இவ்வாறான நிலையிலேயே முதன் முதல் கொழும்பு மரதன் ஓட்ட போட்டி 42 முஅ தூரம் ஓட ஆரம்பித்தேன். இந்த போட்டியில் 1800 வீரர்கள் கலந்தும் சிறப்பித்தனர்.

இதில் நான் 13 இடத்தை பெற்றேன். அதே ஆண்டில்SOS வீதி ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றேன் 2001 கண்டியில் நடைபெற்ற 42 KM தூர மரதன் ஓட்ட போட்டியில்

கலந்துக் கொண்டு நான் 13 அம் இடத்தை பெற்றேன். இப்போட்டியில் 2000க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடந்து நடைபெற்ற வீதி மரதன் ஓட்ட போட்டியில் 2002 வருடத்தில் 21km நான்காம் இடம் 2003 வருடத்தில் 21km 14 இடம் 2004 வருடத்தில் 21 km மூன்றாமிடம் 2004 சர்வதேச

புகைத்தல் தடுப்பு தின வீதி மரதன் ஓட்ட போட்டியில் 10000 M முதலாமிடம் பெற்றேன். தொடர்ந்து ஆசிரியர் ஞானசேகரன் வழிகாட்டலில் இரத்தினபுரி மைதானத்தில் தேசிய இளைஞர்

சேவை மன்றத்தினால் நடாத்திய 10000 M மீற்றர் மரதன் ஒட்ட போட்டியில் பங்குபற்றி பெற்றிபெற்றேன். தொடர்ந்து 2005 மத்திய மாகாணம் நடாத்திய 10000 M 1500 M 800 M ஓட்ட

போட்டியில் முதலிடம் பெற்று சிறந்த விளையாட்டு வீரர் விருதினை கௌரவ ஊ.டீ.ரத்நாயக்க அவர்களின் மூலம் சான்றிதழை பெற்றேன்.

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

இவ்வாறான நிலையில் 2015 மே 15 இந்தியாவில் பெங்களுர் மரதன் ஓட்ட போட்டி கடும் சிரமத்திற்கு சென்றேன் இதற்கான உதவியினை தோட்ட பொது மக்கள்¸ எனது உடன்

பிறந்த சகோதரர்கள் மற்றும் முன்னால் அமைச்சர் பழனி திகாம்பரம் ஐயா அவர்கள் மூலம் 7000 ரூபாவிற்கு பாதணி

ஒன்று வாங்கி தந்தார். காலஞ்சென்ற அருள்சாமி ஐயா அவர்களும் பாதணி ஒன்று வாங்கி தந்தார். அனைவருக்கும் நன்றிகள்.

பெங்களுர் மரதன் ஓட்ட போட்டியில் 18300 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கெண்டனர். அதில் நான் 21 km 175 M

தூரத்தை 1 மணித்தியாலயம் 12 நிமிடம் 25 செக்கன் ஓடி முடித்து 12 வது இடத்தை பிடித்து பதக்கமும் சான்றிதழும் பெற்றேன்.

தொடர்ந்து மரதன் ஓட்ட போட்டி ஆர்வத்தோடு கலந்து 2010 விளையாட்டு பயிற்சி நெறியை கற்க இந்தியா நேரு

மைதானத்திற்கு சென்றேன். அங்கு 75 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் பயிற்சி பெற்று (DIPLOMA COURSE FOR COACHES) பட்டம் பெற்று வந்துள்ளேன்.

2011 ஆண்டு ஓர் வீதி விபத்தில் இரண்டு விரல்களை இழந்தும் 2015 ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வீதி ஓட்டம்¸ சூரிய வெப்பம் வானொலி மற்றும் மலையக

கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்திய போட்டிகளில் முதலிடம் பிடித்து என்னை இவ்வளவு தூரம் உலகரியச் செய்த சூரியன் FM ஏ.லோசன் அண்ணன் மற்றும் அறிவிப்பாளர் அஜித்

அண்ணன் மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற உருப்பினர்களும் தொடர்ந்து மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வருடதோரும் நடாத்தி வந்த மரதன் ஒட்ட

போட்டிகளில் 2015 முதலிடம்¸ 2016 மூன்றாம்மிடம் 2017 2ம் இரண்டாமிடம் 2018 இரண்டாமிடம் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றேன்.

எனது சொந்த முயற்சியாலும் குறிபிட்ட சிலரின் உதவியுடனும் இவ்வாறன வெற்றிகளை பெற்று

வருகின்றேன். எனக்கு மலையத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் பயிற்சிகளை வழங்கவும்

முடியும் இதற்கான அனுசரனையாளர்கள் கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Leave a Reply