சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும்
Spread the love

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் – இலங்கையுடன்

இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

நேற்றும் (14) இன்றும் (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு

பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலக துணைத் தூதர் ஸ்ரீ ராக்கேஷ் நட்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச

மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் வி.ராஜசேகர்

உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழிப்புணர்வுக் கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப்

பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தி சுக வாழ்வுடன் வாழவேண்டும் என்ற ஆலோசனை வழிமுறைகள் பற்றிய தெளிவான

விளக்கங்களை வைத்தியர்கள் வழங்கி வைத்து அதுதொடர்பிலான வழிகாட்டி கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருகோணமலை கேம்பஸ் உள்ளகப்பயிற்சி வைத்தியர்களினால் யோகாப் பயிற்சி செய்முறைகளும் செய்து காட்டப்பட்டு அதுதொடர்பிலான

விளக்களை அதிதிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்ட
அதேவேளை பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்காக அந்த உணவு
வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா –