சம்பள பொதி வேண்டாம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே வேண்டும்

Spread the love

சம்பள பொதி வேண்டாம்
ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமே வேண்டும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்படுத்த உள்ளதாக அன்மையில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சம்பளம் வருகின்ற மார்ச்

மாதம் முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த சம்பள அதிகரிப்பு அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து சம்பள பொதியாக வருகைக்கான கொடுப்பனவு தேயிலை விலை கொடுப்பனவு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும்

ஏனைய கொடுப்பனவுகள் அடங்களாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட கூடாது. ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்தில் இதனை ஒரு வாக்குறிதியாகவும் கூறியுள்ளார்.

அந்த வகையில் வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்த அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை கட்டாயம் வழங்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்

முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். (04.02.2020)

நுவரெலியா மாவட்டம் ஜபோரஸ்ட்; பிரம்லி தோட்ட மக்களின் அன்றாட தேவைக்காக பாராளுமன்ற

உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் வினியோக திட்டத்தை மக்கள் பாவனைக்ககாக

கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் பொழுது இளைஞர்களுக்கான விளையாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருந்த போதும் அந்த பிரச்சனைகளில் முதல் இடம் பிடிப்பது சம்பள பிரச்சனையே. நாங்கள் அமைச்சராக இருந்த போது

ஐம்பது ரூபாய் அதிகரிப்பதற்கு முயற்சிகள் செய்தோம் கிடைக்கவில்லை. அதற்கு முழ முற்றுக்கட்டையாக

இருந்தது இந்த கம்பனிகள் தான். அதே போல் இதற்கும் கம்பனிகள் முற்றுக்கடடையாக இருந்து விடக் கூடாது.

பெருந்தோட்டங்கள் நட்டம் அடைந்துள்ளதாக கூறியே சம்பள அதிகரிப்பிற்கு கம்பனிகள் தடையாக இருக்கின்றனர். ஆனால் கம்பனிகள் தோட்டத்தை துப்பரவு

செய்து உரம் போட்டு விலைச்சலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதில்லை. தோட்டங்களில் உற்பத்திக்கான எந்தவிதமான அபிவிருத்தி

செயற்பாடுகளும் செய்யாமல் எப்படி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். தோட்டங்கள் நட்டம் அடைவதற்கு கம்பனிகளே காராணமாக இருக்கின்றன.

பெருந்தோட்ட கம்பனிகள் 23 இல் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க கூடிய வருமானம் உள்ள பல கம்பனிகளும் உள்ளன. சில கம்பனிகள் அவ்வாறு இல்லாததினால் ஆயிரம் ரூபா

சம்பள இலுத்தடிப்பிற்கு காரணமாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும் அரசாங்கம் அறிவித்தது போல் ஆயிரம்

ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்

சம்பள பொதி வேண்டாம் ஆயிரம்
சம்பள பொதி வேண்டாம் ஆயிரம்

Leave a Reply