சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்
Spread the love

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தமை குறித்து விளக்கம் கோருவதற்காக மத்திய வங்கி அழைப்பு

சம்பளதின் உயர்வு சிக்கிய வங்கி அதிகாரிகள் அதிகாரிகளை எதிர்வரும் 5ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (01)

நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

வங்கி அதிகாரிகளுக்கு விசாரணை

அத்துடன், எதிர்வரும் 5, 6, 7ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதால், அத்தினங்களுக்கான அலுவல்கள் பற்றியும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது.

இதற்கு அமைய மார்ச் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை கடந்த 20 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட

பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம்,

உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாவது தினமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணி தொடக்கம் பி.ப 5.30 மணி வரை அரசாங்க தரப்பினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைப்பு

மார்ச் 6 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2024.02.03 ஆம் திகதிய 2369/58 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

காலாவதியானதைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் கீழான கட்டளை அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை முன்னையதினம் ஒத்திவைக்கப்பட்ட பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட

கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி

குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம், உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை (திருத்த) சட்டமூலம் ஆகியன விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட சீ நோர் நிறுவனம், இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை

தேசிய நீரியில் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களின் மூன்று வருடாந்த அறிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வன

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.