கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா

Spread the love

கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா

இன்று நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஒன்று கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம் மற்றொன்று வர்த்தக மாபியாக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் என்றார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் 122 ரூபாய்க்கு சீனி இல்லை. அரிசியின் கட்டுபாட்டு விலை நீக்கியதன் பின்னர், 165 ரூபாய்க்கு கீரி சம்பாவைத் தருகிறோம். 115 ரூபாய்க்கு நாடுவைத் தருகிறோம் என அரசாங்கத்தில் உள்ள வர்த்தகர்கள் கூறினார்கள்.

ஆனால் இன்று கீரி சம்பா 180 ரூபாயாகவும் நாடு 115 ரூபாயாகவும் சம்பா 150 ரூபாய்க்கும்
சென்றுள்ளது. ஆகவே வர்த்தக மாபியாக்களான கறுப்பு சந்தை முதலாளிகளே இன்று
அரசாங்கத்தை நிர்வாகம் செய்கின்றனர்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஊடகங்கள் முன்பாக வந்து அரசாங்கத்தின் தீர்மானங்களை தெரிவித்தாலும் அதில் ஒன்று கூட நடக்காது.

தற்போது வர்த்தக மாபியாக்கள் அரசாங்கத்தின் பணியை செய்யும் அதேவேளை, அரசாங்கம் இந்த மாபியாக்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக எதுவுமே தெரியாத மாதிரி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளது என்றார்.

இவ்வாறு இருப்பதற்கு நாட்டில் எதற்கு அரசாங்கம் என கேள்வி எழுப்பிய அவர், இந்த
அரசாங்கமானது வர்த்தக மாபியாக்களுக்கு அடிமையாக வர்த்தக மாபியாக்கள் சொல்வதை
செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றார்.

    Leave a Reply