கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Spread the love

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளுக்கு இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகத்தை நாளை (16) எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

அன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும், அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகள் மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இவ்வாறு இடை நிறுத்தப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.