கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்

Spread the love

கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட

பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இந்த கடற்படை வீரர்கள் அனைவரும் ஹோமகம, ஐ.டி.எச், வெலிகந்த மற்றும்

மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சிகிச்சையின் போது அவர்கள் மீது

நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

அதன்படி, இந்த 17 நபர்களும் உட்பட 443 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

      Leave a Reply