கொரனோ வைரஸ் தாக்குதல் 1011 பேர் பலி

Spread the love

கொரனோ வைரஸ் தாக்குதல் 1011 பேர் பலி

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது

உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் 25க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இந்த வைரஸ் வௌவால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என

கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்றுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 908 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 ஆயிரத்து 640

பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, வைரஸ் பாதிப்பிற்கு தற்போதைய நிலவரப்படி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கூடுதலாக 2 ஆயிரத்து 97 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்

பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

கொரனோ வைரஸ் தாக்குதல்

Leave a Reply