கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

Spread the love

கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்

Covid 19 தொற்று இடர் நிலையினை தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை

வழங்கும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் (08.09.2020) இடம்பெற்றது.

கலந்துரைடலில் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள்,சுகாதார துறைசார் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாக COvid

19 தொற்றின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்த ஆளுநர் தற்போது அனைத்து இடங்களிலும் Covid 19 தொடர்பில் மக்கள்

அலட்சிய போக்கில் செயற்படுவது அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் Covid 19 இடர் தொற்று தொடர்பில் ஆளுநர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

மாதத்திற்கு இரு தடவை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் கிராமசேவகர்இ சுகாதார துறையினர் மற்றும்

பாதுகாப்பு துறையினர் உள்ளடக்கி Covid 19 தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

ஆலய திருவிழா காலங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து ஆலயங்களில் வேறுபட்ட பூசை நேரங்கள் ஏற்பாடு செய்து சமூக

இடைவெளியை பேணி சன நெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைக்கு அண்மையில் உள்ள உணவகங்களை சுகாதார பரிசோதகர்கள்

கடுமையான சுகாதார பரிசோதனைகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் மாதங்கள் மழைக்காலம் .ஆதலால் சூழலை சுத்தமாக பேணி டெங்கு பரவலை தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்ப

பிரிவினர் சட்டநடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென்று வவலியுறுத்தப்பட்டது.

நாம் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருப்பதால் Covid 19 இடர் நிலை தொடர்பாக மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், வெளிநாடுகளில் இருந்து

வருபவர்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டது.

விழாக்கள், பொதுபோக்குவரத்து, பாடசாலைகள்இஆலய திருவிழாக்கள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளி பேணல்

மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மண் அகழ்வு, கிரவல் அகழ்வு தொடர்பில் குறிப்பாக மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டப்பட்டது.

பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இனங்கண்டு அவற்றை சீர்செய்து அவற்றில் உப உணவு பயிர்களை பயிரிட்டு அரசின்

விவசாய அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.

Leave a Reply