கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

Spread the love

கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட 9 லட்சத்து 17 ஆயிரம் பேர்
கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் (கோப்பு படம்)
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

      கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

      தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற

      சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

      இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 17 ஆயிரத்தை

      கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்து 55 ஆயிரத்து 308 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுத்துள்ளது.

      வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 26 ஆயிரத்து 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 427 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

          மருத்துவ ஊழியர்கள்

          கொரோனா பரவியவர்களில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசில் இருந்து

          உலகம் முழுவதும் 9 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

          வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

          அமெரிக்கா – 1,37,465
          ஸ்பெயின் – 1,20,832
          இத்தாலி – 66,624
          பிரான்ஸ் – 45,513
          ஜெர்மனி – 1,14,500
          துருக்கி – 33,791
          ஈரான் – 70,933
          சீனா – 77,474
          பிரேசில் – 30,152
          கனடா – 17,916
          பெல்ஜியம் – 10,878
          சுவிட்சர்லாந்து – 21,800
          ஆஸ்திரியா – 12,362

          கொரனோவில் இருந்து உயிர்
          கொரனோவில் இருந்து உயிர்

              Leave a Reply