கொண்டச்சி கிராமத்தில் மரமுந்திரிகை செய்கை

Spread the love

கொண்டச்சி கிராமத்தில் மரமுந்திரிகை செய்கை

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கூட்டாக இணைந்து மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு 2021.07.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2021.07.05 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாகப் புனரமைத்தல்

1979 ஆம் ஆண்டில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் 6000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் மரமுந்திரிகைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு

மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இடம்பெற்ற யுத்த சூழ்நிலையால் செய்கை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. தற்போது இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கூட்டாகக் குறித்த காணியில் 935 ஏக்கர்களில் மரமுந்திரிகைச்

செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கொண்டச்சி தோட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்காக 125 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியைப் பயன்படுத்தி இலங்கை மரமுந்திரிகைக்

கூட்டுத்தாபனம் 1500 ஏக்கர்களில் செய்கையை மேற்கொள்வதற்கும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் தற்போது செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள 935 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக 500 ஏக்கர்களில் மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கும்

திட்டமிடப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான கன்றுகளை வழங்கல், தொழிநுட்ப உதவிகள் மற்றும்

பயிற்சிகள் வழங்கல், கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளவும், செய்கையின் பராமரிப்பு நடவடிக்கைகளை குறித்த

திணைக்களத்தால் மேற்கொள்ளவும் இருதரப்பும் உடன்பாடுகளை எட்டியுள்ளன. அதற்கமைய

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply