கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
Spread the love

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்

கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை.

இந்த பாதிப்புக்கு அனோனிச்சியா காங்கினிடா என்று பெயர். இது மிகவும் அரிய வகை நோயாகும். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் கூறுகையில்,

“அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.


ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்” என்று கூறுகிறது.