குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு

சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
Spread the love

குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு


இலங்கை டோக் மக்காக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்த நிலையில், குரங்கு ஏற்றுமதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

100 இலட்சம் டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழியப்பட்டதை எதிர்த்து இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் உட்பட 30 மனுதாரர்களால், ஏற்றுமதி செய்வதற்கான எந்தவொரு முடிவையும் முடக்கி ஆவணக் கேட்பு நீதிப் பேராணை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு

டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை டோக் மக்காக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பிலே திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.