வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ

Spread the love

கிளிநொச்சி, வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

எனினும், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்இ கத்திக் குத்துக்கு இலக்காகி இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில், கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திக்குத்தில்,
அருளம்பலம் துஷ்யந்தன் பலியானார். இந்நிலையிலேயே, கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துச்செல்வதற்காக, பொலிஸாரின் பாதுகாப்புடன் உறவினர்கள் சிலர், அங்கு சென்றுள்ளனர்.

இதையறிந்த, கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்தவரின் மனைவியும் சகோதரிகளும் ஒருசில கிராம மக்களும் ஒன்றுதிரண்டு, இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து, பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே, சந்தேகநபரின் வீட்டைத் தீவைத்து சிலர் கொளுத்தியுள்ளனர். இதையடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். காயங்களுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Home » Welcome to ethiri .com » வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ

Leave a Reply