காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Spread the love

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை காப்போம் நிறுவனத்தினால் கற்றல்

உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம

காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் 22வது ஆண்டின் மருத்துவக் கட்டுரைக்கான உயர் ஊடகவியல் தேசிய விருதைப்பெற்ற ஊடகவியலாளர் மட்டு.துஷாரா மற்றும் சமூக விழிப்புணர்வு, கலை கலாசார மருத்துவ

ஆக்கங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் ஆகியோர்களை இந்நிகழ்வின்போது

காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரனால் பாராட்டி ஞாபகச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா –

No posts found.