கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

Spread the love

கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.

இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது வாசிப்பு விழா.

கபிலன் வைரமுத்து

கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அதில் அடங்கும்.

தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும்

(இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன.

நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன.

நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் எழுத்தாளர்கள் இருவரும் கெளரவிக்கப்பட விருக்கிறார்கள்.

    Leave a Reply