ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

Spread the love

ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

அமெரிக்க முன்னாள் அதிபார் ஒபாமா எழுதியுள்ள ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தின் பதிப்பாளார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது, ஒபாமா எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பு புத்தகமான ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’,

வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலும் கனடாவிலும் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

முன்பதிவு செய்து வாங்கப்பட்ட பிரதிகள், மின்னணுப் பிரதிகள், மற்றும் ஒலி வடிவப் பிரதிகளும் இதில் அடங்கும்.

எங்களது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எந்தவொரு புத்தகமும் இதுவரை இவ்வளவு அதிக பிரதிகள் விற்பனையானதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ஒபாமாவின் மனைவி மிஷெல் எழுதிய ‘பிகமிங்’ புத்தகம் தான் பெங்குயின் வெளியிட்ட ஒரே நாளில் மிக அதிகமாக விற்பனையானது.

2018 ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் வெளியான 24 மணி நேரத்தில் 7.25 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின. புதன்கிழமை

நிலவரப்படி, அமேஸான் வலைதளத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் ஒபாமாவின் ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ முதலிடத்தில் உள்ளது

Leave a Reply