எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி

Spread the love

எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி

நாட்டின் எரிபொருள் விலை பிரச்சனை நீண்டகாலப் பிரச்சினை என்பதால், அதனை தீர்ப்பதற்கு

முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இன்று (20) பாராளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தமக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர்

எரிபொருள் விலையை அதிகரிப்பை தடுப்பதற்கான மாற்று வழியை முன்வைப்பதற்கு தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பத்து சதவீதமாக அதிகரித்த போதும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால்,

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்

Leave a Reply