எப்படி சொல்வேன்

Spread the love

எப்படி சொல்வேன்

எழுதாத தாள் மேலே – உனை
எழுத வைத்த பேரழகே
தொலையாமல் இருக்குமா – மனம்
தொலைத்து விட்டேன் உன் மேலே

உடையாத பாறையாய்
உச்சி மலை இருந்தென்னை
கன்ன குழி சிரிப்பழகில்
கடைந்து விட்டாய் நீ என்னை

இடை பிடிக்கும் உன் விரலின்
இடையிலே என் விழிகள்
ஊடுருவி பார்க்குதடி
உடல் பரவசம் ஆகுதடி

வேர்க்காத உன் உதட்டில்
வேலை ஒன்று செய்திடவா ..?
சந்தனத்து உடல் அழகை
சாயும் காலம் மென்றிடவா ..?

இல்லாத மார்புக்கு
இடையில் என்ன சாளரமோ ..?
உடையாத பூவுக்குள்
உள்ளே என்ன எந்திரமோ ..?

எப்படி சொல்வேன்

மார்பு தடவும் கூந்தலின்
மல்லிகை வாசத்தை
முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
முன்னுள்ள நுரையீரல் …?

வாலிபத்தை நோகடித்து
வாசல் வந்து நின்னவளே
நாள் ஒன்று வீனாகி
நலிந்து போனேன் என்னவளே

இச்சைக்கு வரி வைத்து
இயங்கும் உலகிலே
நீதி கேட்பீரா
நின்று பதில் சொல்வீரா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 22-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply