இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

Spread the love

இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு

பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்

தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள

திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்

கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு

பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்

தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்

மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.

ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்

தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்

பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய

குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்

பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.

இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்

இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை

பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்

தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்

மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க

உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்

சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.

அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக

இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு

Leave a Reply