இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி

Spread the love

இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி

இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, அவர்களில் பெரும்பாலானவர்களின்

சடலங்கள் (ஜனாஸாக்கள்) தகனம் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, மொத்த தொற்றாளர்களில் 120 முஸ்லிம்கள் எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள்

வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள். இவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியிருக்கும்’ எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துரைத்துள்ள அவர், ‘சளி பழசானால் கொரோனா தொற்று

ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிப்பவர்களே, அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியாத மக்களே, ஜனாஸாக்களைத் தகனம் செய்யுமாறு கூக்குரலிடுகின்றனர்’ என்றார்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென சகல நிபுணர்களும் தெரிவிக்கும் போது

, அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்,

மக்களைப் பீதிக்குள்ளாக்கி, மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் இறப்பதற்குப் பயமில்லை. ஆனால் எரிப்பதற்ப் பயப்படுகின்றனர் என்றார்.

உலகம் பூராவுமுள்ள 194 நாடுகள், சடலங்களை அடக்கம் செய்யும் போது, இலங்கை மாத்திரம் எந்த அறிவியலை அடிப்படையாக வைத்து, தகனம் செய்கிறதென கேள்வி எழுப்பிய அவர், முழு

உலகமே ஏற்றுக்கொண்ட வைத்தியர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அங்கே இங்கே பணத்தைக் கொடுத்து சித்தியடைந்தவர்களையும் இந்த விடயத்துடன் சம்பந்தமே இல்லாத, தகுதியற்றவர்ளையும்

குழுக்களில் இணைத்து, அவர்களின் முடிவுகளைப் பெற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply