இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

Spread the love

இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை “நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு” என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.

பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத்

தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.

மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம்

மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.

இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின்

போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்த புதிய பிரிவை அமைச்சர் சரத் வீரசேகர திறந்துவைத்தார்.

    Leave a Reply