இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

Spread the love

இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுள்ளனர் இராணுவ தளபதி


இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருப்பதாக இராணுவ

தளபதியும் கொவிட் 19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வர தெரிவித்துள்ளார்.

கொவிட்19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தில் செய்திளார் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் மிஹிந்தலை புஸ்ஸ ஆகிய கடற்படை முகாங்களில் இன்று

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
வெலிசறை கடற்கடை முகாமில் 112 வீரர்கள்

தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர் , விடுமுறையில் சென்ற 68 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளனனர் என்றும் அவர் கூறினார்.

முப்படை வீரர்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டதின் போது இதுவரை பலர்

முகாமிற்கு திரும்பியுள்ளனர். மேலும் பலர் முகாமிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


31 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்பொழுது 3181 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கணகாணிப்புக்கு

உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் முப்படையினரால் நடத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலி இருந்து 3512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இன்றைய தினம் டாக்காவில் இலங்கைக்கு வருவதற்காக எதிர்பார்த்துள்ள 74 பேரை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன்

விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக புனானைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதே போன்று

இந்தியாவில் கோயம்புத்தூரிலிருந்துநேற்று இலங்கை வந்த மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக் கடற்படையை
இலங்கைக் கடற்படையை

Leave a Reply