ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

Spread the love

திடீரென -ஈராக்கில் இருந்து இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் ஈரானிய இராணுவ தளபதி படுகொலை புரியப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஜேர்மனிய படைகளில்; கணிசமானவை அங்கிருந்து

ஈராக்கின் எல்லைப்புற நாடுகளான ஜோர்டான் ,மற்றும் குவைத்துக்கு அவசரமாக அனுப்ப படுகின்றன

அமெரிக்கா இராணுவம் எங்கள் தாய் மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அது தவறின் அவர்களது குடும்பங்கள் ,பிள்ளைகள் மற்றும் இராணுவத்தினர்

பிணமாகவோ,காயங்களுடனோ அனுப்பி வைக்க படுவார்கள் என ஈராக் ,அதிரடியாக அறிவித்துள்ளது .

அதே போலவே ஈரான் ,கிசு புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு படைகளும் கூறியுள்ளன .


அமெரிக்கா புரிந்த உலக சட்ட விதிகளுக்கு எதிரான இந்த படுகொலை முயற்சி செனட் சபையில் விவாதிக்க படவுள்ளது .

அத்துடன் சர்வதேச சட்ட நிபுணர் குழு இது தொடர்பான வழக்கினை மேற்கொள்ள கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

அவ்வாறு வழக்கு தொடர பட்டால் டிரம்ப் செய்த செயல் ஒரு போர்க் குற்றம் எனவும் அவர் தண்டிக்க பட கூடிய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

எனினும் உலக சட்டநிபுணர்கள் முடிவை ,இவர்கள் நகர்வை அவததனித்தே செனட் அடுத்த கட்ட நடவடிகை டிரம் மீது மேற்கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது .

ஜெர்மன் தனது படைகளை அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவது ஏன் என்பது புரியவில்லை

,அச்சத்திலா …? அல்லது ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் கண்டிப்பாக தாக்குவார்கள் என்ற நிலையிலா ..?

போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கழிகின்ற நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .உலக சந்தையில் ,தங்கம் ,எரிபொருள் நிலை திடீரென அதிகரித்துள்ளது .

பிரதான எண்ணெய் ஏற்றுமதி ஈரான் மற்றும் ஈராக்கிடம் இருந்தே செல்கின்றன ,இந்த வளங்களை

கொள்ளையடிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நடுகல் அங்கே முகாம் இட்டு கொள்ளையடித்து அந்த மக்களை கொன்று வருவது இங்கே கவனிக்க தக்கது .

அதாவது கோட்டு போட்ட மகா கொள்ளையர்கள் இந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர்கள் என்பதாக மக்கள் பார்க்கின்றனர் ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் அகற்ற பட மாட்டாது என விழுந்து கட்டி பிரிட்டன் பாதுகாப்பபு மந்திரி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் .

அப்படி என்றால் இவர்கள் ஈரானை தாக்கிட இப்பொழுதே திட்டம் போட்டு விட்டனர் ,ஈரான் செய்ய போகும் ஒரு தாக்குதல் ஒன்றுக்காக காத்து உள்ளனர்

அதனை அடுத்து ஈரான் மீது தாக்குதலை இவர்கள் நடத்த போவதையே இந்த நகர்வுகள் இப்பொழுது காண்பிக்கிறது

  • வன்னி மைந்தன் –
இருந்து இருந்து ஜெர்மன்

Leave a Reply