இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Spread the love

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரவில் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

ஆயுர்வேதத்தின்படி இரவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அவை செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும். இரவில் காரமான,

எண்ணெய் கலந்த கடினமான உணவுகளைஇரவில் உட்கொள்ளும்போது செரிமானமா வதில் சிக்கல்கள் உண்டாகும். அத்துடன் தூக்கமின்மை, மன அமைதியின்மை, நீரிழப்பு, வாயு தொல்லை,

வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் குடலுக்கு இதமளிக்கும். காலையில் அதிக ஆற்றலை உணரவைத்து

உற்சாகமாக செயல்பட தூண்டும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகள் இரவில் தவிர்க்க வேண்டும்.

தயிர்: சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு தயிர் உதவும். ஆனால் இரவில் அதனை உட்கொள்ளக்கூடாது. தயிருக்கு பதிலாக இரவில் மோர் அருந்தலாம். ஏனெனில் தயிர் உடலில் கபம்

சார்ந்த பிரச்சினையை அதிகரிக்கும். உணவுகள் உடலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். நாசி துவாரங்களில் சளி உருவாகுவதற்கும் வழிவகுத்துவிடும்.

சாப்பாடு: இரவில் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். மேலும் குறைவான அளவே சாப்பிட வேண்டும்.

இந்த இரண்டு விஷயங்களையும் இரவில் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். பொதுவாக இரவில் செரிமான அமைப்பின்

செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். அந்த சமயத்தில் அதிகமாக உணவுகள் சாப்பிடுவது, ஜீரணமாவதற்கு கடினமாகிவிடும். காலையில் அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

புரதம்: இரவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பயறு வகைகள், பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை, பழங்கள் போன்றவற்றை இரவில் சாப்பிடலாம்.

இரவில் இத்தகைய உணவுகள் செரிமான அமைப்பை மிகவும் இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால்: இரவில் பால் பருகும் பழக்கம் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பாலைத்தான் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குளிர்ந்த பாலை உட்கொள்ளக்கூடாது. சூடான பாலை பருகுவதுதான்

சிறந்தது. ஏனெனில் சூடான பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்தான் எளிதில் ஜீரணமாகும். இரவில் வெறுமனே பால் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். பாலுடன் சிறிதளவு இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து பருகலாம்.

சாலா பொருட்கள்: உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான மசாலாப் பொருள்களை தேர்வுசெய்தால், அது

உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வையும் சீராக பராமரிக்கும். அவற்றை இரவு உணவிலும் பயன்படுத்தலாம். ஆனால் காரமான மசாலா பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.

இரவு உணவில் லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    Leave a Reply